மதுரங்குளிய, நல்லந்தல்வ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் வீட்டுக்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர், தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், பிள்ளைகள் எப்போதாவது தம்மைப் பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பெண் தனது வீட்டின் படுக்கையில் கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் மேலும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.