ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரது முக்கிய உதவியாளரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதான நபர் பொன்னம்பெருமகே தனுஷ் புத்திக என்ற “அங்கொட ஜிலே”வின் பிரதான உதவியாளர் ஆவார்.
சந்தேகநபரிடம் இருந்து 25.500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 51 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் இருந்து ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 274,400 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.