எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே குறித்த பெண்கள் குழு இதனை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட வேண்டும் எனவும் தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பெண் பிரதமரை நியமித்து அரசியலில் பெண்களின் வகிபாகத்தை சமமாகப் பேணி வருகிறார்.
ஆண் அரசியல்வாதிகள், பெண்களுக்கு வாக்களியுங்கள் என்றும் படித்த ஆளுமை மிக்க தலைமைத்துவம் கொண்ட பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துவதில்லை.
எனவே நாடாளுமன்றத்தில் பெண்களின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் இதற்காகக் கட்சிகள் ஒவ்வொன்றும் பெண் பிரதிநிதிகளை உள்வாங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரியுள்ளது.