பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞன் பலி

தணமல்வில – உடவளவை பிரதான வீதியில் 25 ஆவது மைல்கல் அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

தணமல்வில பகுதியிலிருந்து உடவளவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில்  தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மொனராகலை, செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய  இளைஞன் ஆவார்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.