நொச்சியாகம – காலதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்
உந்துருளியில் பயணித்த குறித்த இருவரும் எதிர்த் திசையில் பிரவேசித்த பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இருவரும் 16 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டள்ளன.
இதேவேளை உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் 41 வயதான தாய் ஒருவர் தமது 4 வயதான மகனுடன் நேற்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.
அங்கிருந்தவர்களின் உதவியுடன் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.