பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, பந்துலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.