மாட்டுவண்டி சவாரியில் இடம்பெற்ற தகராறினால் இன்று காலை இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.
சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.