லண்டனில் இருந்து தாயகம் திரும்பியிருந்த நிலையில் வவுனியாவில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 32 வயதான சிந்துஜா என் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பெண் குடும்ப பிரச்சினை காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிந்துஜாவின் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மரணத்திற்கான விசாரணையின் பின்னர் நேற்று பொலிஸார் தகவல் வெளியிட்டனர். லண்டனில் இருந்து நாடு திரும்பியவர் வவுனியாவில் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அருகாமையிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த 32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் லண்டனில் வசித்துவருவதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.