பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணமான ஆப்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
லூசோன் தீவின் ஆப்ரா, தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியது.
நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும், 50-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும் பதிவாகியதால் வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு, பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டன.