சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 19ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம் வழமை போல் முன்னெடுக்கப்படும்.
மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.