வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் டாா்ஃபா் பகுதியில் அரபு பழங்குடியினருக்கும் அரபு அல்லாத பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 224 மோதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், இதில் 430 க்கு மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடானில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.