AUSvIRE ; அவுஸ்திரேலிய அணி 42 ஓட்டங்களால் வெற்றி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஆரோன் பிஞ்ச் 63 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் பாரி மெக்கார்த்தி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 15 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக லோர்கன் டக்கர் அதிரடியாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அயர்லாந்து அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் 14 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அத்துடன், எடம் சம்பா 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் , மிட்செல் ஸ்டார்க் 43 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 8 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.  

AUSvIRE T20WorldCup