பாணந்துறையில் ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் கறிபணிஸ் ஒன்றில் லைட்டரின் பாகங்கள் இருந்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் நேற்று (08) தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு மீன் கறிபணிஸ்களை கொள்வனவு செய்துள்ளார்.
அதன்போது, அவரது இளைய மகன் சாப்பிட்ட மீன் கறிபணிஸில் லைட்டர் ஒன்றின் உலோகப் பகுதி இருந்தது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த போது,
‘தான் விடுமுறையில் இருப்பதாகவும் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பிரச்சினையை தெரிவிக்குமாறும்’ பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்
எனினும், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று அவர் இதனைக் கூறியபோதும் தனது முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பி அனுப்பட்டதாகக மஞ்சுள பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த ஹோட்டல் பாணந்துறை மாநகர சபைக்குட்பட்ட ஹோட்டல் எனவும், இது தொடர்பில் மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர்.