டெல்லியில் அதிக பனி மூட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அடர்த்தியான மூடுபனியுடன் காணப்படும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.

பல இடங்களில் சுமார் 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்

இதேவேளை நேற்று நிலவிய பனிமூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் . நேற்று காலை 6:30 மணி வரை குறைந்தது 39 ரயில் தாமதமாக இயக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது