கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 என்ற கோல்களால் வென்றது.
இதையடுத்து , கோபத்தில் கொந்தளித்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸெல்ஸிலுள்ள வீதிகளில் இறங்கி வன்முறை கலவரங்களில் ஈடுபட்டனர்.
இந்த கலவரங்களில் ஒரு காரை அடித்து நொருக்கி கவிழ்க்கப்பட்டதுடன் பட்டாசுக்களை வெடிக்க வைத்து வீதியில் கலவரங்களை மேற்கொண்டனர்.
இரசிகர்கள் ஆவேசமான கூச்சலிட்டு, காரை நொருக்கி , நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்து வன்முறைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.