INDvSL. ; இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பூனேவில் இடம்பெற்ற நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.