தாய்லந்தில் “kidney-for-iPhone 14” என்ற தலைப்புடன், வேடிக்கை என்ற பெயரில் படங்கள் இணையத்தில் வலம் வருவதை மருத்துவர்கள் கண்டித்துள்ளனர்.
சந்தையில் அதிக விலைக்கு கைத்தொலைபேசியான iPhone 14 விற்கப்படும். அதை வாங்க முடியாதவர்கள் சிலர், அவர்களின் சிறுநீரகத்தை விற்று அதை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 பேர் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்தது போல், கையில் தொலைபேசியை வைத்திருக்கின்றனர்.
அது முறையற்ற செயல் என்று மருத்துவர்கள் சாடியதாய் சர்வதேச செய்தி கூறியுள்ளது.
தாய்லந்தில் உடல் உறுப்புகளை விற்பது சட்டவிரோதமானது.
நாட்டில் அப்படிச் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்று தாய்லந்து செஞ்சிலுவைச் சங்க உறுப்பு தான நிலையத்தின் தலைமை நிர்வாகி உறுதியாகச் கூறியுள்ளார்.
உறுப்பு தானம், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் iPhone கைத்தொலைபேசி வாங்கப் பணமில்லையென்றால், உறுப்புகளை விற்கக்கூட மக்கள் தயார் என்பது போல் காட்டும் இத்தகைய படங்கள் முறைகேடானவை என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அந்தப் படங்கள் சில சமூக ஊடகத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.