IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்த கொல்கத்தா

17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் தற்சமயம் சென்னையில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் தலைவர் Pat Cummins 24 ஓட்டங்களையும் Aiden Markram 20 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ஓட்டங்கள்  வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் படி 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தமை குறிப்பிடத்தக்கது.