ISIS அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ISIS தீவிரவாதிகளை குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று (20) கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும், இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அஹமதாபாத்திற்கு வருகை தந்தமைக்கான நோக்கத்தைக் கண்டறியும் வகையில் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்கள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அஹமதாபாத்திற்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் குறித்த நால்வரின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.