நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றதாகவும் அவர் சாடியுள்ளார்.
பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் அல்லது வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதற்கு சுதந்திரம் உள்ளதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் நிலைமை சரியான நேரத்தில் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் மின்சார நுகர்வோர் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.