ஜூன் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினமான ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.