இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு நேற்று (14) கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் குழுவுடன் இணைந்து, தம்புள்ளை இப்பன்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ரூ 750,000.00 பெறுமதியான 2.5 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதனை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தம்புள்ளை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.