காதலர் தினம் கொண்டாட காதலி மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு 

காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்வதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த  இளைஞர் நேற்று (12.02.2025)  கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன் என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டிருந்தார், ஆனால் அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

அந்த இளைஞன் வற்புறுத்தியதால், பலமுறை பெண் அந்த இளைஞன் மீது கோபமடைந்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.

கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.