மருமகளை காப்பாற்றுவதற்கு முயற்சித்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பொஹரபாவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
நிறை மது போதையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த மகன் தனது மனைவியை தாக்கியுள்ளார்.
மகனின் தாக்குதலில் இருந்து தனது மருமகளை தந்தை காப்பாற்ற முற்பட்ட வேளை மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.