தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய ரீதியில் தற்போது சேவையில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கான தீர்வினை இந்த வாரத்திற்குள்ளேயே எதிர்ப்பார்க்கின்றோம்.

அவ்வாறில்லை எனில், அடுத்த திங்கட்கிழமை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.