பொருட்களின் விலைகள் குறையும்! – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி 

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொருட்களின் விலை குறையும் என அகில  இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 20% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று முதல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் குறைந்துள்ளது.

இதனால் பொருட்களின் விலை 5% முதல் 10% வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தைக்கு வழங்கப்படுமென்றும், இதனால் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.