புகையிரதத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (12) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.25 மணியளவில் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தில் இருந்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் புகையிரதத்தின் 3வது பெட்டியில் தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டு புகையிரதத்தின் துணை சாரதி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவானின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் கேகாலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.