அனுராதபுரம் – பதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.