இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீஸ்துறை சார்பில் ரூ.1.34 கோடியும் இந்திய பொலிஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் ரூ.6.63 லட்சமும் என மொத்தம் ரூ.1.40 கோடி நிதி திரட்டப்பட்டு
இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி வைத்துள்ளார்