ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், 5 வாகனங்கள், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.