எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் நாடளாவிய ரீதியாக செயற்படும் ஒக்டேன் 92 ரக பெற்றோலை விநியோகிக்கும் 101 எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒட்டோ டீசலை விநியோகிக்கும் 61 விநியோகஸ்த்தர்களும் 50 சதவீதமான கையிருப்பை கொண்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.