6 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இதற்கான நினைவுப் படிகத்தை இணையவழி ஊடாக திரைநீக்கம் செய்துவைத்துள்ளனர்.
இந்த ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மத்திய நிலையம் காணப்படுகிறது.
அத்துடன் ஹம்பாந்தோட்டையில் துணை நிலையமும் காலி, அருகம்பை, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களில் ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.