சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுமி கொலை!

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் இணைந்து கூட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கொலை செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பில்  படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றதையடுத்து பொலிஸார் அம்மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.

பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.