ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்தார்
அதன்படி தபால் வாக்குகள் விநியோகம் மற்றும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்க 8000 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறுகியுள்ளார்
மேலும் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு தபால் திணைக்களம் கடமைப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.