எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தீர்மானம் தொடர்பாக வவுனியாவில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்கினேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் வேந்தன், க.துளசி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தை சேர்ந்த பொ.ஜங்கரநேசன் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.