ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு இன்று ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
இச்சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார்.
சந்திப்பில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 07 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.