தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட , கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.