வாகன உரிமையாளர்களுக்கான தேசிய எரிபொருள் அட்டை முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நேற்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் சாத்தியமானதன்று. என என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் அட்டை முறையின் கீழ் வாராந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவு செய்து கொள்வதற்கான இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்கள் ஆகியும், பலமுறை முயற்சித்தும் உரிய இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யமுடியவில்லை என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.