நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரும் 4 பெண்களும் 16 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்விடத்திலிருந்து இன்று காலை அவர்கள் நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றுக்கான இரண்டு நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.