நெடுஞ்சாலையில் விமானம் விபத்து – மூவர் பலி

பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
தலைநகர் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
 
விமானம் விபத்திற்குள்ளானதையடுத்து குறித்த நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
 
எனினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.