பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களில் 12 பேரின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய மாணவர்களை அடையாளம் காணும் பணி இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.