மண்சரிவு முன்னெச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.