சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவு உட்கொள்ளும் உடனடி நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது.
முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.