ராமர் சேது பாலத்திற்கு பதில் புதிய பாதை குறித்து இலங்கை ஆராய்வு

இலங்கை ராமர் சேது பாலத்திற்கு பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய வேறு நிலத்தொடர்பை  ஏற்படுத்துவது குறித்து ஆராயவுள்ளது.

இந்து மத உணர்வுகளை தவிர்ப்பதற்காக  இலங்கை இவ்வாறு சிந்தித்து வருகின்றது.

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயத்தின்போது இலங்கை துறைமுகங்களுடன் தொடர்பை அதிகரிப்பதற்காக தரைரீதியிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டது.

நீண்டகாலத்திற்குமுன்னர்  இதேயோசனை முன்வைக்கப்பட்டவேளை ராமர்சேது  பாலம் அல்லது ஆதாமின் பாலத்தை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இராவணணின் பிடியிலிருந்த  சீதையை காப்பாற்றுவதற்காக ராமர் இலங்கை நோக்கி பயணித்தவேளை உருவாக்கப்பட்டது இந்த பாலம் என்பது புராணம்.

இந்தியாவில் சேதுசமுத்திர திட்டத்திற்கு சில தரப்பினர் சூழல் ஆர்வலர்கள் சில இந்துக்குழுக்கள் போன்றவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றன- இந்திய நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைதொடர்பை ஏற்படுத்துவதற்காக புதிய பாதையொன்றை உருவாக்குவது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இராமர்சேது பாலத்தை விட இது நீளமாக காணப்படும் என தெரிவித்துள்ளன.