கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – பூநகரி வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோ.புருசோத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்