அமெரிக்காவில்  துப்பாக்கி சூடு. ;  5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி.

அமெரிக்காவில் சால்ட் லேக் சிட்டியில் துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் இருப்பவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபட்ட பொலிசார் தற்செயலாக சென்றுள்ளனர்.

இதில், அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். இதனை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது,

துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. பொதுமக்களுக்கு இதனால், அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. நகரின் தென்பகுதியில் 8 ஆயிரம் பேர் வசிக்க கூடிய பகுதியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.