வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்துள்ளது

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.