அர்ஜெண்டினாவில் 14 மாடி குடியிருப்பில் தீ. : குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

அர்ஜெண்டினா தலைநகர் பியுன்ஸ் ஏர்ஸ்சில் 14 மாடி குடியிருப்பில் பற்றிய தீயில் குழந்தைகள், பெண்கள் என 5 பேர் உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் 35 பேர் மீட்கபட்டனர்.

6வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் பற்றிய தீ மெல்ல அண்டை குடியிருப்புகளையும் தீக்கிரையாக்கியுள்ளது .

வீட்டை விட்டு வெளியேற முடியாமல் 3 சிறு குழந்தைகள் மற்றும் இரு பெண்கள், உயிரிழந்தனர்.

முதியோர் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.