ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் (22.02.2023) நாடாளுமன்றில் வைத்து பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.