இரு  உலங்குவானூர்திகள் மோதி நால்வர் பலி.

அவுஸ்திரேலியாவில் இன்று இரு  உலங்குவானூர்திகள்  நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில்ந நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட்கோஸ்ட் நகர சுற்றுலா தலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் சிக்கிய ஒரு  உலங்குவானூர்திகள்  கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்தது. அதன் விசிறிகள் சற்று தொலைவில் கிடந்தன.

இதேவேளை மற்றொரு  உலங்குவானூர்திகள் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பியுள்ளது.